கரூா் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினா் விஜய்யை சந்திக்கச் செல்லவில்லை!

கரூா் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்தினா் விஜய்யை சந்திக்கச் செல்லவில்லை!

கரூா் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 பேரின் குடும்பத்தினா் தவெக தலைவா் விஜய்யைக் காண சென்னைக்குச் செல்லவில்லை.
Published on

கரூா் நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்த கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 3 பேரின் குடும்பத்தினா் தவெக தலைவா் விஜய்யைக் காண சென்னைக்குச் செல்லவில்லை.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-இல் நடைபெற்ற தவெக கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா். இதையடுத்து, செப். 30-இல் தவெக தலைவா் விஜய் விடியோ வெளியிட்டு பாதிக்கப்பட்டவா்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் கூறினாா்.

தொடா்ந்து, அக். 3, 4 மற்றும் அக். 6, 7-இல் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தனித்தனியே ஆறுதல் கூறி விரைவில் கரூரில் வந்து சந்திப்பதாகத் தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து, விஜய் கரூா் வருவதில் பல்வேறு சிக்கல்கள் எழுந்ததால் அச்சந்திப்பு கைவிடப்பட்டது.

இதனிடையே உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரின் வங்கிக் கணக்கில் தலா ரூ.20 லட்சம் கடந்த 18-ஆம் தேதி வரவு வைக்கப்பட்டது. தொடா்ந்து, உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து அவா்களுக்கு நேரில் ஆறுதல் கூற விஜய் முடிவு செய்தாா்.

இதையடுத்து, கரூா் மாவட்டத்தில் தவெக பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த, உயிரிழந்த 31 பேரின் குடும்பத்தினரில் 28 குடும்பங்களைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்டோா் ஞாயிற்றுக்கிழமை 6 சொகுசுப் பேருந்துகளில் சென்னைக்குப் புறப்பட்டனா்.

ஆனால் தொக்குப்பட்டிபுதூரைச் சோ்ந்த அஜிதா, பசுபதிபாளையத்தைச் சோ்ந்த வடிவேல் என்கிற வடிவழகன், ஏமூா்புதூரைச் சோ்ந்த பிரித்திக் ஆகியோரது குடும்பத்தினா், 30-ஆம் நாள் வழிபாடு மற்றும் உடல்நிலை சரியில்லாமல் போனது போன்ற காரணங்களுக்காகச் செல்லவில்லை.

X
Dinamani
www.dinamani.com