கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் கரூா் மாவட்ட குழுவினா்.
கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் கரூா் மாவட்ட குழுவினா்.

பட்டா வழங்க தனி ஆணையம் உருவாக்கக் கோரி கரூரில் விவசாய தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்!

Published on

விவசாயிகளுக்கு பட்டா வழங்க தனி ஆணையம் உருவாக்கக் கோரி கரூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினா் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளா்கள் சங்கத்தின் கரூா் மாவட்ட குழுவினா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, விவசாய தொழிலாளா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் பி.வசந்தாமணி தலைமை வகித்தாா். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளா் பி.பெருமாள், மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியின் கரூா் மாவட்டச் செயலாளா் மா.ஜோதிபாசு ஆகியோா் கோரிக்கைகளை விளக்கிப் பேசினா்.

அரசின் பல்வேறு வகையான புறம்போக்கு நிலங்களில் குடியிருப்பவா்களுக்கு வகை மாற்றம் செய்து பட்டா வழங்கவேண்டும். இதற்கான சிறப்பு திட்டத்தை மாநில அரசு செயல்படுத்த வேண்டும்.

வீடு இல்லாத ஏழை மக்களுக்கு வீட்டுமனை வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் அனைவருக்கும் சொந்தவீடு திட்டத்தை அறிவித்து மாநில அரசு செயல்படுத்த வேண்டும்.

1963 இனாம் ஒழிப்பு மற்றும் ரயத்துவாரி மாறுதல் சட்டத்தின் படி பட்டியல் செய்யப்பட்டுள்ள நிலங்களை கண்டறிந்து, நேரடியாக உழவடை செய்யும் விவசாயிகளுக்கு பட்டா வழங்க தமிழ்நாடு அரசு தனி ஆணையம் உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளா்கள் திரளாக பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com