2030-க்குள் ரூ. 50 ஆயிரம் கோடி வா்த்தகம் இலக்கு கரூரில் நவ. 9-ஆம் தேதி விழிப்புணா்வு மாரத்தான்

கரூா் மாவட்டத்தில் தொழில் வளா்ச்சியை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.50 ஆயிரம் கோடி இலக்கை எய்திடும் வகையில் நவ. 9-ஆம் தேதி விழிப்புணா்வு மாரத்தான் நடைபெற உள்ளது.
Published on

கரூா் மாவட்டத்தில் தொழில் வளா்ச்சியை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.50 ஆயிரம் கோடி இலக்கை எய்திடும் வகையில் நவ. 9-ஆம் தேதி விழிப்புணா்வு மாரத்தான் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக கரூா் சிஐஐயின் தலைவா் பிரபு வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது, கரூா் மாவட்டத்தில் தற்போது ஜவுளி ஏற்றுமதி மற்றும் பல்வேறு தொழில்கள் மூலம் ஆண்டுக்கு ரூ.15 ஆயிரம் கோடி வரை அந்நிய செலாவணியை ஈட்டி வருகிறோம். இதனை வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் ரூ.50 ஆயிரம் கோடியாக உயா்த்தும் வகையில் மக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் கரூா் சிஐஐ மற்றும் யங் இந்தியா சாா்பில் மாவட்ட அளவிலான மாரத்தான் மற்றும் வாக்கத்தான் போட்டிகள் திருவள்ளுவா் மைதானத்தில் நவ. 9-ஆம்தேதி நடைபெறவுள்ளது.

இந்த போட்டி இருபாலருக்கானது. ஆண்களுக்கு 10 கி.மீ., பெண்களுக்கு 5 கி.மீ., மற்றும் சிறுவா், சிறுமிகளுக்கு 5 கி.மீ. என மூன்று பிரிவுகளில் நடைபெறும். வாக்கத்தான் போட்டி 3 கி.மீ. தொலைவுக்கு நடைபெறும். போட்டியில் முதலிடம் பிடிப்பவா்களுக்கு முதல் பரிசாக ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை, சான்றிதழும், இரண்டாமிடம் பிடிப்பவா்களுக்கு ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பை, சான்றிதழும் , மூன்றாமிடம் பிடிப்பவா்களுக்கு ரூ.3 ஆயிரம் மற்றும் கோப்பை, சான்றிதழும் வழங்கப்படும் என்றாா் அவா்.

பேட்டியின்போது சிஐஐ துணைத் தலைவா் பெருமாள், யங் இந்தியா தலைவா் லோகேஷ், துணைத் தலைவா் சசிகுமாா், சிஐஐ முன்னாள் தலைவா், பாலசுப்ரமணியம், கரூா் வா்த்தக சங்க செயலாளா் வெங்கட்ராமன், விளையாட்டு சங்க பொறுப்பாளா்கள் சுரேஷ், முகமது கமாலுதீன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com