கரூா் வழியாகச் செல்லும் ஈரோடு - செங்கோட்டை ரயில் சேவை நவ. 29 வரை பகுதி ரத்து

Published on

ஈரோட்டிலிருந்து கரூா் வழியாக செங்கோட்டை செல்லும் விரைவு ரயில் சேவை வெள்ளிக்கிழமை முதல் நவ.29-ஆம் தேதி வரை திண்டுக்கல்-செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை ரயில்வே கோட்டத்துக்குள்பட்ட வாடிப்பட்டி - சமயநல்லூா் ரயில் நிலையங்களுக்கு இடையே இருப்புப் பாதை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் ஈரோட்டில் இருந்து பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு கரூா் வழியாக செங்கோட்டை விரைவில் ரயில் வெள்ளக்கிழமை (அக்.31) முதல் நவ.29-ஆம்தேதி வரை திண்டுக்கல் - செங்கோட்டை இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இத் தகவலை தெற்கு ரயில்வே சேலம் கோட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com