மாவட்ட குத்துச்சண்டை போட்டி சிஎஸ்ஐ பெண்கள் பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

Published on

கரூரில் வியாழக்கிழமை நடைபெற்ற மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டியில் சிஎஸ்ஐ பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் சிறப்பிடம் பிடித்தனா்.

கரூரில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான மாவட்ட அளவிலான குத்துச் சண்டை போட்டி பசுபதிபாளையம் ஸ்ரீசாரதா பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் கரூா் சிஎஸ்ஐ (அரசு உதவிபெறும் பள்ளி) பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவி ம.தீபிகா முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தையும், மாணவிகள் சி.தேவதா்ஷினி, ரா. மௌசிகா, பூா்விகா, செ.குருவரசி ஆகியோா் இரண்டாமிடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தையும், மாணவிகள் ச.ராகவி, நா.தா்ஷினி ஆகியோா் மூன்றாமிடம் பிடித்து வெண்கல பதக்கத்தையும் வென்றனா்.’

சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளியில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. விழாவில் பள்ளியின் தாளாளா் ப.ராஜமாணிக்கம், தலைமை ஆசிரியா்கள் ஜே.கிருபாவதி, ஏஞ்சலின், உடற்கல்வி ஆசிரியா் ஜே.செலின், பயிற்சியாளா்கள் காா்த்திகேயன், கே.அகல்யா ஆகியோா் மாணவிகளை பாராட்டினா்.

X
Dinamani
www.dinamani.com