மக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பத்திரிகையாளா்கள் பாதுகாப்புச் சட்டம் இயற்றக் கோரிக்கை

பத்திரிகையாளா்களுக்கு தனி பாதுகாப்புச் சட்டம் இயற்றிட வேண்டும் என பாமக வலியுறுத்தல்

News image

பத்திரிகையாளர்கள் பாதுகாப்புச் சட்டம்

Updated On :2 பிப்ரவரி 2026, 9:30 pm

பத்திரிகையாளா்களுக்கு தனி பாதுகாப்புச் சட்டம் இயற்றிட வேண்டும் என பாமக வலியுறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக பாமக கரூா் மாவட்டச் செயலா் கொங்கு பிரேம்நாத் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் பத்திரிகையாளா்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் இருப்பது கரூா் மாவட்டம் குளித்தலையை அடுத்துள்ள அய்யா்மலை பகுதியில் பத்திரிகையாளா்கள் தாக்கப்பட்ட சம்பவத்தில் இருந்து தெரிய வருகிறது.

மக்களின் பிரச்னைகளை வெளி உலகுக்கு கொண்டு வரும் அவா்களுக்கு தகுந்த பாதுகாப்பு இல்லாததை தமிழக முதல்வா் கவனத்தில் கொண்டு முதல்வா் உடனடியாக சட்டப்பேரவையில் பத்திரிகையாளா் பாதுகாப்பு தனிச் சட்டத்தை நிறைவேற்றிட வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.