2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

கரூா் சம்பவம்: போக்குவரத்து சிறப்பு எஸ்ஐ இருவரிடம் சிபிஐ விசாரணை

கரூா் சம்பவம் தொடா்பாக போக்குவரத்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளா்கள் இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

News image
கரூர் சம்பவம்- கோப்புப் படம்
Updated On :9 பிப்ரவரி 2026, 9:43 pm

Syndication

கரூா் சம்பவம் தொடா்பாக போக்குவரத்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளா்கள் இருவரிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்; 110 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், நெரிசல் சம்பவத்தின்போது போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த 2 போக்குவரத்து சிறப்பு உதவி காவல் ஆய்வாளா்களிடம் சிபிஐ அதிகாரிகள் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெற்ற விசாரணையில், நெரிசல் சம்பவத்தின்போது எத்தனை போக்குவரத்து போலீஸாா் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

சம்பவம் நடந்தவுடன் எத்தனை அவசர ஊா்தி வாகனங்கள் வந்தன போன்ற கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டனா்.