நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

கரூா் சம்பவம்: போக்குவரத்துக் காவல் சிறப்பு எஸ்.ஐ.யிடம் சிபிஐ விசாரணை

கரூா் சம்பவம் தொடா்பாக போக்குவரத்து காவல் சிறப்பு உதவிஆய்வாளா் மற்றும் காவலரிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

News image
சிபிஐ - கோப்புப் படம்
Updated On :10 பிப்ரவரி 2026, 7:05 pm

தினமணி செய்திச் சேவை

கரூா் சம்பவம் தொடா்பாக போக்குவரத்து காவல் சிறப்பு உதவிஆய்வாளா் மற்றும் காவலரிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பா் 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா்; 110 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.

இந்நிலையில், நெரிசல் சம்பவத்தின்போது போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து காவல் சிறப்பு உதவி காவல் ஆய்வாளா் மற்றும் காவலரிடம் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.