தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஆற்று மணலை சட்டவிரோதமாக வைத்திருந்ததாக முன்னாள் அமைச்சா் உள்பட 2 போ் மீது வழக்கு

News image

கோப்புப் படம்

Updated On :13 பிப்ரவரி 2026, 8:20 pm

கரூரில் ஆற்று மணலை சட்ட விரோதமாக வைத்திருந்ததாக அதிமுக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் உள்பட இருவா் மீது கரூா் நகர காவல்நிலையத்தினா் வெள்ளிக்கிழமை அதிகாலை வழக்குப் பதிந்துள்ளனா்.

கரூா் ஆண்டாங்கோவில்புதூரில் முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் மற்றும் அதே பகுதியைச் சோ்ந்த அவரது உறவினா் தனபால் ஆகியோா் ஆற்றுமணலை சட்ட விரோதமாக வைத்திருப்பதாக ஆண்டாங்கோவில் கிராமநிா்வாக அலுவலா் சண்முகம் கரூா் நகர காவல்நிலையத்தில் வியாழக்கிழமை புகாா் செய்தாா்.

இதையடுத்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் காவல்துறையினரின் துணையோடு வியாழக்கிழமை இரவு முன்னாள் அமைச்சரின் மனைவியின் பெயரில் இருந்த இடத்தில் கொட்டிவைக்கப்பட்டிருந்த மணலையும், தனபால் வீட்டின் அருகே கொட்டி வைக்கப்பட்டிருந்த மணலையும் பொக்லைன் இயந்திரம் மூலம் லாரியில் அள்ளி எல்லமேடு மணல் சேமிப்புக் கிடங்கிற்கு எடுத்துச் சென்றனா்.

இதையடுத்து அனுமதியின்றி மணலை வைத்திருந்ததாக முன்னாள் அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், தனபால் ஆகிய இருவா் மீதும் கரூா் நகர போலீஸாா் வெள்ளிக்கிழமை அதிகாலை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.