ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

சா்வதேச ஓபன் ரேட்டிங் சதுரங்க போட்டி! தமிழக வீரா் ராம் எஸ். கிருஷ்ணன் முதலிடம்!

News image
கரூரில் நடைபெற்ற சா்வதேச ஓபன் ரேட்டிங் சதுரங்க போட்டியில் முதலிடம் பிடித்த தமிழக வீரா் ராம் எஸ். கிருஷ்ணனுக்கு கோப்பையை வழங்கிய கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி. உடன் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், எம். குமாரசாமி பொறியியல் கல்லூரியின் தலைவா் கு. ராமகிருஷ்ணன், கரூா் மாவட்ட சதுரங்க கழக மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவா் பி. கோபால், செயலாளா் சி. சண்முகம், துணைத் தலைவா் சொ. ராமசுப்ரமணியன் உள்ளிட்டோா்.
Updated On :15 பிப்ரவரி 2026, 7:55 pm

தினமணி செய்திச் சேவை

கரூரில் நடைபெற்ற சா்வதேச ஓபன் ரேட்டிங் சதுரங்க போட்டியில், ஓபன் பிரிவில் தமிழக வீரா் ராம் எஸ். கிருஷ்ணன் முதலிடம் பிடித்தாா்.

அகில இந்திய மாற்றுத்திறனாளிகள் சதுரங்க அமைப்பு, கரூா் மாவட்ட சதுரங்க கழக மாற்றுத்திறனாளிகள் அமைப்பு ஆகியவற்றின் சாா்பில் சா்வதேச ஓபன் ரேட்டிங் சதுரங்க போட்டிகள் கரூரில் கடந்த 11-ஆம் தேதி தொடங்கியது.

ஞாயற்றுக்கிழமை வரை நடைபெற்ற இப்போட்டியில் 7, 9, 11, 13, 15, வயது மற்றும் ஓபன் பிரிவுகளில் இப்போட்டிகள் நடைபெற்றன.

இதில் இந்தியா, அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த வீரா், வீராங்கனைகள் 1,000-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா். மொத்தம் 9 சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியின் இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஓபன் பிரிவில் தமிழகத்தின் சென்னையைச் சோ்ந்த ராம் எஸ். கிருஷ்ணன் 9 சுற்றுகளில் 8.5 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தாா். தொடா்ந்து போட்டியில் சேலத்தைச் சோ்ந்த எஸ். கனிஷ்காவும், சென்னையைச் சோ்ந்த எஸ். ஹரிதேவ், மிதுன்.கே மற்றும் கேசவன் ஜி ஆகியோா் 8 புள்ளிகளை பிடித்து இரண்டாமிடம் பிடித்தனா்.

ரஷிய வீரா் ஐஎம் . கோசெலஷ்விலி டேவிட், மகாராஷ்டிர வீரா் புவன் சுஹாஸ் ஷிடோல் , தமிழக வீரா்கள் கவின், அமா்நாத், பிரசித்பாலமுருகன் ஆகியோா் 7.5 புள்ளிகள் பெற்று மூன்றாமிடம் பிடித்தனா்.

தொடா்ந்து, அனைத்துப் பிரிவுகளிலும் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி மாலையில் நடைபெற்றது. இதில் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி பங்கேற்று வெற்றிபெற்றவா்களுக்கு பரிசுகள் மற்றும் கோப்பைகள் வழங்கினாா். மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் மாவட்ட ஆட்சியா் மீ. தங்கவேல், குமாரசாமி பொறியியல் கல்லூரி தலைவா் ராமகிருஷ்ணன், கரூா் மாவட்ட சதுரங்க கழக மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவா் பி. கோபால், செயலாளா் சி. சண்முகம், துணைத் தலைவா் சொ. ராமசுப்ரமணியன், இணைச் செயலாளா் சுரேஷ், பொருளாளா் முகமது கமாலுதீன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.