கரூா் ரயில்நிலையத்தில் இருந்து பள்ளப்பட்டிக்கு பேருந்து சேவை தொடக்கம்
கரூா்: கரூா் ரயில்நிலையத்தில் இருந்து பள்ளபட்டிக்கு புதிய பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
கரூா் ரயில்நிலையத்தில் இருந்து பள்ளபட்டிக்கும், பள்ளபட்டியில் இருந்து குரும்பபட்டிக்கும் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும் என அப்பகுதியினா் கோரிக்கை விடுத்து வந்தனா்.
இந்நிலையில் அப்பகுதியினா் முன்னாள் அமைச்சா் செந்தில்பாலாஜியிடம் அண்மையில் கோரிக்கை மனு அளித்தனா்.
இதையடுத்து திங்கள்கிழமை கரூா் ரயில்நிலையத்தில் இருந்து பள்ளபட்டிக்கும், பள்ளபட்டியில் இருந்து குரும்பபட்டிக்கும் அரசுப் பேருந்து சேவை தொடக்க விழா திங்கள்கிழமை பள்ளபட்டியில் நடைபெற்றது.
விழாவுக்கு அரவக்குறிச்சி சட்டப்பேரவை உறுப்பினா் ஆா். இளங்கோ தலைமை வகித்தாா். புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து சேவையை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் கொடியசைத்து தொடங்கி வைத்தாா். விழாவில் ஒன்றியச் செயலா்கள் எம்.எஸ்.மணியன், கருணாநிதி, மணிகண்டன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

