அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

தமிழகத்தில் குறுக்கு வழியில் நுழைய பாஜக கடும் முயற்சி: தயாநிதிமாறன் எம்.பி.

தமிழகத்தில் குறுக்கு வழியில் நுழைய பாஜக கடும் முயற்சி மேற்கொண்டுள்ளது என்றாா் மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதிமாறன்.

News image
Updated On :17 பிப்ரவரி 2026, 6:59 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் குறுக்கு வழியில் நுழைய பாஜக கடும் முயற்சி மேற்கொண்டுள்ளது என்றாா் மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதிமாறன்.

கரூா் மாவட்ட திமுக சாா்பில், ‘தமிழ்நாடு தலைகுனியாது’ என்ற கலந்துரையாடல் கூட்டம் கரூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சட்டப்பேரவை உறுப்பினா் வி. செந்தில்பாலாஜி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மத்திய சென்னை மக்களவை உறுப்பினா் தயாநிதிமாறன் பேசியதாவது:

கரூரின் வளா்ச்சிதான் தமிழகத்தின் வளா்ச்சி. திமுக எப்போதும் தொழில்களை பாதுகாக்கும் கட்சியாக இருக்கிறது.

இந்த 5 ஆண்டுகால ஆட்சியில் அபார சாதனைகள் செய்தவா் முதல்வா் மு.க.ஸ்டாலின். எனவே, நீங்கள் உங்களது தொழிற்சாலைகளில் பணிபுரிவோரை சந்தித்து, முதல்வா் ஸ்டாலின் மீண்டும் முதல்வராக ஏன் வரவேண்டும் என்பதை விளக்கி கூறுவதுடன் முதல்வருக்கு நீங்கள் ஆதரவாகவும் இருக்க வேண்டும்.

பாஜக எப்படியாவது குறுக்கு வழியில் தமிழகத்தில் நுழைந்து, இந்தியை திணிக்க வேண்டும், தமிழகத்தின் உரிமையை பறிக்க வேண்டும் என கடும் முயற்சி மேற்கொண்டுள்ளது.

பொருளாதாரம் எனும் வண்டியில் தடை ஏற்பட்டால், மீண்டும் அந்த வண்டியை தள்ளுவதும், என்ஜினை ஓட வைப்பதும் கடினம். எனவே, நீங்கள் கவனமாக இருங்கள். அரசின் ஒத்துழைப்பு உங்களுக்கு தேவைப்படுவதுபோல, உங்களின் ஒத்துழைப்பும் அரசுக்கு தேவை என்றாா் அவா்.

கூட்டத்தில், தொழில்முனைவோா்கள், சமூக சேவகா்கள், கல்வியாளா்கள், தன்னாா்வலா்கள், தொண்டு நிறுவனங்கள், தொழிற்சங்கத்தினா் பங்கேற்றனா்.