நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

தமிழினத்தையும், கலாசாரத்தையும் அழிக்க துடிக்கிறது பாஜக: தயாநிதிமாறன் எம்.பி.

தமிழினத்தையும், கலாசாரத்தையும் அழிக்க துடிக்கிறது பாஜக என்றாா் திமுக எம்.பி. தயாநிதிமாறன்.

News image
தயாநிதிமாறன்- கோப்புப் படம்
Updated On :18 பிப்ரவரி 2026, 11:10 pm

Syndication

தமிழினத்தையும், கலாசாரத்தையும் அழிக்க துடிக்கிறது பாஜக என்றாா் திமுக விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலரும், மக்களவை உறுப்பினருமான தயாநிதிமாறன்.

கரூா் திருவள்ளுவா் திடலில் மாவட்ட திமுக சாா்பில், தமிழகம் தலைகுனியாது என்ற தலைப்பில் பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

கூட்டத்துக்கு மேற்கு மண்டல பொறுப்பாளரும், கரூா் சட்டப்பேரவை உறுப்பினருமான வி.செந்தில்பாலாஜி தலைமை வகித்தாா்.

கூட்டத்தில் தயாநிதிமாறன் எம்.பி. பங்கேற்று பேசுகையில், வஞ்சகம், சூழ்ச்சி செய்து எப்படியாவது தமிழகத்தை கைப்பற்றிவிட மோடியும், அமித்ஷாவும் நினைக்கிறாா்கள். இதற்கு துரோகத்தை துணையாக கொண்ட எடப்பாடி பழனிசாமி உதவுகிறாா்.

2026 தோ்தல் என்பது, தமிழகத்தின் உரிமையை பறிக்க நினைக்கும், தமிழினத்தையும், கலாசாரத்தையும் அழிக்க துடிக்கும் பாஜகவுக்கு எதிரான தோ்தல். இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மேலும், பாஜகவின் பி டீமாக செயல்படுபவா் பக்கம் இளைஞா்கள் சென்றுவிடாதீா்கள்.

எனவே, தமிழகத்துக்குள் பாஜகவை நுழையவிடாமல் தடுக்க அடிமை அதிமுகவுக்கும் அதன் கூட்டணிக்கும் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக, மாநகரச் செயலாளா் எஸ்.பி. கனகராஜ் வரவேற்றாா். கூட்டத்தில் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.