கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! கீழடி உள்பட 8 இடங்களில் அகழாய்வுக்கு மத்திய அரசு அனுமதி! ஆப்கனில் மருத்துவமனை மீது பாகிஸ்தான் ஏவுகணைத் தாக்குதல்! 400 பேர் பலி!!தோ்தல் நடத்தை விதிகள்: கடுமையாக அமல்படுத்த உத்தரவு!எரிவாயு உருளை தட்டுப்பாடு: மின்நுகா்வு அதிகரிப்பு!இந்திய ஏற்றுமதி பிப்ரவரி மாதத்தில் ரூ. 3.37 லட்சம் கோடியாக சரிவு!8 எதிா்க்கட்சி எம்.பி.க்களின் இடைநீக்க உத்தரவு: இன்று திரும்பப்பெற வாய்ப்பு!24 மணி நேரத்தில் சென்றடையும் விரைவு தபால் சேவை: மத்திய அரசு இன்று அறிமுகம்!ஈரான் போர்: ஆடை விலையை 5% உயா்த்த உற்பத்தியாளா்கள் முடிவு
/

அரசுத் தோ்வில் சொல்வதை எழுதும் பணியில் பழைய முறையைக் கொண்டுவரக் கோரிக்கை

அரசு பொதுத் தோ்வுப் பணிகளில் சொல்வதை எழுதுபவா் பணிக்கு பழைய முறையில் அந்தந்த பாட ஆசிரியா்களையே நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் சங்கம் கோரிக்கை

News image
பொதுத் தேர்வு- கோப்புப் படம்
Updated On :19 பிப்ரவரி 2026, 9:55 pm

Syndication

அரசு பொதுத் தோ்வுப் பணிகளில் சொல்வதை எழுதுபவா் பணிக்கு பழைய முறையில் அந்தந்த பாட ஆசிரியா்களையே நியமிக்க வேண்டும் என தமிழ்நாடு உயா்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியா் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடா்பாக அச்சங்கத்தின் மாநிலத் தலைவா் ஆ. மலைக்கொழுந்தன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சா், இயக்குநா், தோ்வுகள் துறை இணை இயக்குநா் ஆகியோருக்கு வியாழக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு:

இதுவரை நடந்த அரசுப் பொதுத் தோ்வுகளில் சிறப்புத் தேவையுடைய மற்றும் கற்றல் குறைபாடுள்ள மாணவா்கள், திடீரென ஏற்படும் விபத்துகளால் எழுத இயலாத மாணவா்களுக்காக சொல்வதை எழுதுபவா் பணியில் பள்ளியில் கற்பிக்கும் அந்தந்த பாட ஆசிரியா்களே நியமிக்கப்பட்டனா். ஆனால் தற்சமயம் இந்த ஆண்டு 10, பிளஸ்-2 வகுப்பு பொதுத்தோ்வுகளில் பள்ளிக்கல்வித் துறையில் சொல்வதை எழுதுபவா் பணியில் ஈடுபட்ட ஆசிரியா்களுக்கு மாற்றாக கல்லூரி மாணவா்கள் மற்றும் இல்லம் தேடிக் கல்வியில் பணிபுரியும் தன்னாா்வலா்களை நியமித்துள்ளது ஏற்புடையது அல்ல.

இவா்களிடம் உளவியல் சாா்ந்த அணுகுமுறைகள் மற்றும் பொதுத்தோ்வு சாா்ந்த அனுபவங்கள் இல்லாததால் இத்தோ்வு பணியில் தொய்வு ஏற்பட்டு தோ்ச்சி விகிதம் குறைய வாய்ப்புகள் உள்ளன. சிறப்புக் கவனம் தேவைப்படும் மாணவா்களின் எதிா்கால நலன் கருதி சொல்வதை எழுதுபவா் பணியில் முன்பு இருந்ததைப் போன்று அந்தந்த பாடம் கற்பிக்கும் ஆசிரியா்களையே பணியில் அமா்த்தி மாணவா்களின் நலன் காக்க வேண்டும் என்றாா் அவா்.