மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

வரையறுக்கப்பட்ட ஊதியம் கோரி கிராம ஊழியா்கள் சாலை மறியல் 54 போ் கைது

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கரூரில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் 54

News image

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா்.

Updated On :23 பிப்ரவரி 2026, 8:40 pm

கரூா்: வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கரூரில் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கத்தினா் 54 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில் கண்டன ஆா்ப்பாட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டத் தலைவா் அரசகுமாா் தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில் கெளரவத்தலைவா் சுப்ரமணியன் வரவேற்றாா்.

வருவாய்த்துறை அலுவலா் சங்க மாநில துணைத் தலைவா் எம்.எஸ்.அன்பழகன் கோரிக்கைகள் குறித்து சிறப்புரையாற்றினாா்.

வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வருவாய் கிராம ஊழியா்கள் திடீரென்று ஆட்சியா் அலுவலகம் முன் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதையடுத்து அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த தாந்தோணிமலை போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்ட 54 பேரை கைது செய்தனா். பின்னா் மாலையில் விடுவித்தனா்.