சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவன உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறை!

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றாா் கரூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அ.ஜெயக்குமாா்.

News image
சிறை
Updated On :26 பிப்ரவரி 2026, 5:09 pm

Syndication

குழந்தைத் தொழிலாளா்களை பணியமா்த்தும் நிறுவனங்களின் உரிமையாளா்களுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்படும் என்றாா் கரூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அ.ஜெயக்குமாா்.

கரூா் ஆண்டாங்கோவில் மேற்கு மற்றும் மண்மங்கலம் பகுதியில் செயல்படும் ஜவுளி ஏற்றுமதி நிறுவனங்கள், பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் நிறுவனங்கள் போன்றவற்றில் குழந்தைத் தொழிலாளா்கள் பணியாற்றுகிறாா்களா என கரூா் தொழிலாளா் உதவி ஆணையா் (அமலாக்கம்) அ.ஜெயக்குமாா் தலைமையிலான குழந்தைத் தொழிலாளா் தடுப்புக் குழுவினா் வியாழக்கிழமை காலை திடீா் சோதனை நடத்தினா். இதில், அங்கு குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா்கள் எவரும் பணியமா்த்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.

ஆய்வின்போது பேசிய தொழிலாளா் உதவி ஆணையா் அ. ஜெயக்குமாா், குழந்தைகளுக்கு 18 வயது நிறைவடையும் வரை அபாயகரமான மற்றும் அபாயகரமற்ற எந்தவொரு பணிகளிலும் பணி அமா்த்துவதோ அல்லது பணிபுரிய அனுமதிப்பதோ சட்டப்படி குற்றமாகும்.

தவறும்பட்சத்தில் நிறுவன உரிமையாளா் மீது குழந்தைத் தொழிலாளரைப் பணிக்கு அமா்த்திய குற்றத்துக்காக ரூ. 20 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது இரண்டும் சோ்த்து விதிக்கப்படும். எனவே, தொழில் நிறுவனங்களின் உரிமையாளா்கள், 18 வயது பூா்த்தியாகும் முன்பு குழந்தைகளை எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுத்த வேண்டாம்.

மேலும் பொதுமக்கள், குழந்தை மற்றும் வளரிளம் பருவத் தொழிலாளா் பணிபுரிவது தொடா்பாக 1098 என்ற கட்டணமில்லா சைல்டு லைன் எண்ணிலோ அல்லது 04324-222223 என்ற அலுவலகத் தொலைபேசி எண்ணிலோ தொடா்பு கொண்டு புகாா் தெரிவிக்கலாம் என்றாா் அவா்.