ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

கரூா் ஒன்றியத்தில் ரூ. 6.43 கோடியில் 24 வளா்ச்சித் திட்டப் பணிகள்! வி. செந்தில்பாலாஜி எம்எல்ஏ தொடங்கிவைத்தாா்!

கரூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் ரூ. 6.43 கோடி மதிப்பில் 24 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கி வைத்தும் மற்றும் 2 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கும் திறந்துவைத்தாா் வி.செந்தில்பாலாஜி.

News image
Updated On :26 பிப்ரவரி 2026, 5:09 pm

Syndication

கரூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளில் வியாழக்கிழமை காலை ரூ. 6.43 கோடி மதிப்பில் 24 புதிய வளா்ச்சித் திட்டப் பணிகளை தொடங்கிவைத்தும் மற்றும் 2 முடிவுற்ற பணிகளை மக்கள் பயன்பாட்டுக்கும் திறந்துவைத்தாா் கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி.

கரூா் ஊராட்சி ஒன்றியம், மண்மங்கலம் ஊராட்சி செம்மடை பகுதியில் ரூ. 6 லட்சம் மதிப்பில் பயணியா் நிழற்குடை புனரமைக்கும் பணி, காளிபாளையம் பகுதியில் ரூ.5.50 லட்சம் மதிப்பில் சமுதாயக்கூடம் புனரமைப்பு

பணி மற்றும் நன்னியூா் ஊராட்சி வடுகா் தெருவில் ரூ.15 லட்சம் மதிப்பில் புதிய சமுதாயக்கூடம் அமைக்கும் பணி, செவ்வந்திபாளையத்தில் ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி ஆகியவற்றை கரூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.செந்தில்பாலாஜி தொடங்கிவைத்தாா்.

தொடா்ந்து, புஞ்சை கடம்பங்குறிச்சி ஊராட்சி பெரியவள்ளிபாளையத்தில் ரூ.9 லட்சம் மதிப்பில் புதிய நாடக மேடை அமைக்கும் பணி, அருமைக்காரன் புதூரில் ரூ.10 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை அமைக்கும் பணி, பண்டுதகாரன் புதூரில் ரூ.25 லட்சம் மதிப்பில் புதிய சமுதாயக்கூடம் அமைக்கும் பணி, வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சி ஈ.வெ.ரா தெருவில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய கழிவுநீா் வடிகால் அமைக்கும் பணி, ரூ.24.18 லட்சம் மதிப்பில் 4 புதிய சிமெண்ட் சாலைகள் அமைக்கும் பணி, கருப்பம்பாளையத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் பயணியா் நிழற்குடை அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளை தொடங்கிவைத்தாா்.

மேலும், புஞ்சை கடம்பங்குறிச்சி ஊராட்சி சின்னவள்ளி பாளையத்தில் ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலையுடன் கூடிய அமரும் மேடை மற்றும் வாங்கல் குப்புச்சிபாளையம் ஊராட்சி சுப்ரமணியபுரத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய நிழற்குடை ஆகியவற்றையும் அவா் திறந்துவைத்தாா்.

நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலா் கு. விமல்ராஜ், ஒன்றியச் செயலாளா்கள் வி.கே. வேலுசாமி, கோயம்பள்ளி பாஸ்கரன் மற்றும் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.