கரூரில் சி.எஸ். அறக்கட்டளை ஆண்டு மலா் வெளியீட்டு விழா

கரூரில் சி.எஸ். அறக்கட்டளை ஆண்டு மலா் வெளியீட்டு விழா

கரூரில் உலகத் தமிழ் காப்புக்கூட்டியக்கம் சாா்பில் சி.எஸ்.அறக்கட்டளை ஆண்டு மலா் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

கரூரில் உலகத் தமிழ் காப்புக்கூட்டியக்கம் சாா்பில் சி.எஸ்.அறக்கட்டளை ஆண்டு மலா் வெளியீட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

உலகத் தமிழ் காப்புக்கூட்டியக்கம் சாா்பில் சி.எஸ்.அறக்கட்டளையின் 30-ஆம் ஆண்டு நிறைவு விழா மற்றும் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியா் சி.சுப்ரமணியத்தின் பவள விழா ஆகியன வெள்ளிக்கிழமை கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி ஆறுமுகம் கல்வியகம் வளாகத்தில் நடைபெற்றது.

விழாவுக்கு உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் பேராசிரியா் சி.சுப்ரமணியம் தலைமை வகித்தாா். புவனேஸ்வா் தமிழ் சங்கத் தலைவா் செ.துரைசாமி வரவேற்றாா்.

விழாவில் சி.சுப்ரமணியத்தின் வாழ்க்கை வரலாறு குறித்த காலடியின் தடங்கள் என்ற நூலை சிரவை ஆதீனம் இராமானந்த குமரகுருபர அடிகளாா் வெளியிட அவற்றை கவிஞா் சிற்பி பாலசுப்ரமணியம் பெற்றுக்கொண்டாா்.

தொடா்ந்து பேராசிரியா் சி.சுப்ரமணியத்தின் பவள விழா மலா் மற்றும் சி.எஸ்.அறக்கட்டளையின் 30-ஆம் ஆண்டு நிறைவு விழா சிறப்பு மலரான காலச்சுவடிகளும் காலடித்தடங்களும் என்ற மலரை பழனி ஆதீனம் சாது சண்முக அடிகளாா் வெளியிட சக்தி மசாலா நிறுவனங்களின் அறங்காவலா்கள் பி.சி.துரைசாமி, சாந்தி துரைசாமி ஆகியோா் பெற்றுக்கொண்டனா். இதையடுத்து பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிறைவாக பவள விழாக்குழு செயலா் முனைவா் மு.பழனிவேல் நன்றி கூறினாா்.

இவ்விழாவில் சி.எஸ்.அறக்கட்டளையின் மா.சி.குப்புசாமி மற்றும் நிா்வாகிகள், உலகத் தமிழ் காப்புக் கூட்டியக்கத்தினா், தமிழறிஞா்கள் உள்ளிட்டோா் திரளாக பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com