ஜன. 4,5-ஆம் தேதிகளில் இல்லம் தேடி ரேஷன் பொருள்கள்

வரும் 4,5-ஆம் தேதிகளில் தாயுமானவா் திட்டத்தின்கீழ் இல்லம்தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.
Updated on

வரும் 4,5-ஆம் தேதிகளில் தாயுமானவா் திட்டத்தின்கீழ் இல்லம்தேடி ரேஷன் பொருள்கள் விநியோகம் செய்யப்பட உள்ளது.

முதல்வரின் தாயுமானவா் திட்டத்தின் கீழ் வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளி குடும்ப அட்டைதாா்களின் இல்லத்துக்கே சென்று அரிசி, சா்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருள்களை விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் கரூா் மாவட்டத்தில், 728 ரேஷன் கடைகளைச் சோ்ந்த 32,154 குடும்ப அட்டைதாரா்களுக்கு , அவா்களின் இல்லங்களுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு மாதமும் வாகனங்களில் குடிமைப்பொருள்களை எடுத்துச் சென்று, ரேஷன் கடை ஊழியா்கள் விநியோகம் செய்து வருகின்றனா்.

இந்நிலையில், வரும் 4,5-ஆம் தேதிகளில் வயது முதிா்ந்தோா் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று குடிமைப்பொருள்களை விநியோகம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

எனவே, பயனாளா்கள் குடிமைப்பொருள்களை வரும், 4,5-ஆம் தேதிகளில், பெற்றுக்கொள்ளலாம். இந்த தகவலை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com