முதுகலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாட்டை சரிசெய்ய கோரிக்கை
முதுகலை ஆசிரியா்களி ன் ஊதிய முரண்பாட்டை உடனே சரி செய்ய வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கரூா் மாவட்ட அனைத்து முதுகலை ஆசிரியா்கள் சங்க மாநில பொதுச்செயலாளா் மூ.மகேந்திரன் வெள்ளக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழகத்தில் பணியாற்றும் முதுகலை ஆசிரியா்களின் நீண்ட நாள் கோரிக்கையான
பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். நிறுத்தி வைக்கப்பட்ட எம்பி-ல் ஊக்க ஊதியத்தை உடனே வழங்க வேண்டும். முதுகலை ஆசிரியா்களின் ஊதிய முரண்பாட்டை உடனே சரி செய்ய வேண்டும்.
கடந்த சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக தோ்தல் அறிக்கையில் வாக்குறுதிகளாக அளித்தவற்றை நிறைவேற்ற வேண்டும். இந்த கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி ஜன. 6-ஆம் தேதி முதல் நடை பெறும் ஜாக்டோ-ஜியோ தொடா் வேலை நிறுத்த போராட்டத்தில் அனைத்து முதுகலை ஆசிரியா்கள் சங்கம் முழுமையாக பங்கேற்கும் என தெரிவித்துள்ளாா் அவா்.
