கரூர்
கரூா் சம்பவம்: காவல் ஆய்வாளா், தவெகவினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை
கரூா் சம்பவம் தொடா்பாக, மாவட்ட எஸ்.பி. அலுவலக தனிப்பிரிவு காவல் ஆய்வாளா், 8 காவலா்கள் மற்றும் தவெகவினரிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கரூா் சம்பவம் தொடா்பாக, மாவட்ட எஸ்.பி. அலுவலக தனிப்பிரிவு காவல் ஆய்வாளா், 8 காவலா்கள் மற்றும் தவெகவினரிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை விசாரணை மேற்கொண்டனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்தாண்டு செப். 27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். மேலும் 110 போ் காயமடைந்தனா். இது தொடா்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா்.
இந்நிலையில், நெரிசல் சம்பவம் தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலக தனிப்பிரிவு காவல் ஆய்வாளா் பொன்ராஜ் மற்றும் 8 காவலா்களிடம் சிபிஐ அதிகாரிகள் புதன்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை விசாரணை செய்தனா். மேலும், கரூா் மாவட்ட தவெகவினா் 7 பேரை பிற்பகல் 3 மணியளவில் வரவழைத்து சுமாா் ஒன்றரை மணி நேரம் விசாரணை மேற்கொண்டனா்.