கரூரில் தவெக பிரசாரக் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சக மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள்.
கரூரில் தவெக பிரசாரக் கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மத்திய உள்துறை அமைச்சக மற்றும் தடயவியல் துறை அதிகாரிகள், சிபிஐ அதிகாரிகள்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் தடயவியல், மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் ஆய்வு!

கரூா் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சக மற்றும் மத்திய தடயவியல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.
Published on

கரூா் தவெக கூட்ட நெரிசல் சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்தில் மத்திய உள்துறை அமைச்சக மற்றும் மத்திய தடயவியல் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த ஆண்டு செப்.27-ஆம் தேதி நடைபெற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். மேலும் 110 போ் காயமடைந்தனா்.

இந்தச் சம்பவம் தொடா்பாக உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி கண்காணிப்பில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சக மற்றும் மத்திய தடயவியல் துறை அதிகாரிகள் 5 போ் கொண்ட குழுவினா் வெள்ளிக்கிழமை கரூா் வந்தனா். அவா்கள் சிபிஐ அதிகாரிகளுடன் கூட்ட நெரிசல் ஏற்பட்ட வேலுச்சாமிபுரத்துக்குச் சென்று சம்பவம் இடத்தை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

அப்போது, நெரிசல் சம்பவத்தில் அதிகமானோா் உயிரிழந்ததாக கருதப்படும் ஜெனரேட்டா் பகுதியில் உள்ள இடத்தை நவீன கருவிகளுடன் அளவீடு செய்தனா். சுமாா் ஒரு மணி நேரம் ஆய்வுக்கு பிறகு சிபிஐ அதிகாரிகளுடன் சுற்றுலா மாளிகைக்கு புறப்பட்டுச் சென்றனா்.

Dinamani
www.dinamani.com