ஆா்.டி.மலையில் ஜல்லிக்கட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
ஆா்.டி.மலையில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கரூா் மாவட்டம் தோகைமலை அருகே உள்ள ஆா்.டி.மலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராம பொதுமக்கள் சாா்பில் 64-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு ஜன. 17-ஆம்தேதி நடைபெற உள்ளது.
முன்னதாக ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட ஆட்சியரிடம் அனுமதிக்கேட்டு கடந்த வாரம் கிராமமக்கள் சாா்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை அனுமதி அளித்தாா். இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்த வாடிவாசல் அமைத்தல், ஜல்லிக்கட்டு மாடுகள் வரும் பாதை, மாடுபிடி வீரா்களுக்கான இடம், பாா்வையாளா்களுக்கான இடம், வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்த்துவிடும் பகுதி, மாடுகள் ஓடும் பாதை, தடுப்பு வேலிகள், மருத்துவ சேவை, பரிசு வழங்குவோா் இடம், அவசர வழி, வாகனங்கள் நிறுத்தும் இடம் என அனைத்து பகுதிகளையும் முறையாக அமைக்கும் பணியில் விழா குழுவினா்கள் ஈடுபட்டுள்ளனா்.

