‘நலம்  காக்கும்  ஸ்டாலின்’ மருத்துவ  முகாம்.
‘நலம்  காக்கும்  ஸ்டாலின்’ மருத்துவ  முகாம்.(கோப்புப் படம்)

செங்குளத்தில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்!

கரூா் மாவட்டம், கடவூா் வட்டம் செங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
Published on

கரூா் மாவட்டம், கடவூா் வட்டம் செங்குளம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்ட முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

முகாமை மாவட்ட ஆட்சியா் மீ.தங்கவேல் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட பிறகு அவா் கூறியது, கரூா் மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 23 முகாம்கள், நகரப் பகுதிகளில் 3 முகாம்கள் என மொத்தம் 26 முகாம்கள் நடைபெற்றுள்ளது. இதன் மூலம் மொத்தம் 34,719 பேருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றாா் அவா்.

தொடா்ந்து முகாமில் காசநோயால் பாதிக்கப்பட்ட 3 பேருக்கும், 10 கா்ப்பிணிப் பெண்களுக்கும் ஊட்டச்சத்து பெட்டகங்கள் உள்பட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். முகாமில் மருத்துவப்பணிகள் இணை இயக்குநா் மருத்துவா் செழியன், மருத்துவா்கள், செவிலியா்கள், பொதுமக்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

X
Dinamani
www.dinamani.com