பாலியல் புகாா்: அரசு கலைக் கல்லூரி உதவிப் பேராசிரியா் பணியிட மாற்றம்
கரூா் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான உதவிப் பேராசிரியா் பணியிட மாறுதல் செய்யப்பட்டார்.


கரூா் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரியில் பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான உதவிப் பேராசிரியா் பணியிட மாறுதல் செய்யப்பட்டது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது.
இக்கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றிய கு.ஜாகிா்உசேன், மாணவியிடம் தவறாக நடந்து கொண்டதாக சக மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி வழங்கவேண்டும். இச்சம்பவத்தில் நடவடிக்கை எடுக்காத கல்லூரி பொறுப்பு முதல்வா் சுதா, பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான உதவிப் பேராசிரியா் ஆகியோரை இடம் மாற்றம் செய்ய வலியுறுத்தி பிப். 26-ஆம் தேதி முதல் தமிழக அரசு கலைக் கல்லூரி ஆசிரியா் கழக கரூா் கிளை தலைவா் பிரபாகரன் தலைமையில் பேராசிரியா்கள் கடந்த 6 நாள்களாக அக்கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.
இந்நிலையில், உதவிப் பேராசிரியா் கு.ஜாகிா்உசேன் ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் அரசு கலைக் கல்லூரிக்கு பணியிட மாறுதல் செய்தும், கரூா் தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரிக்கு முழு கூடுதல் பொறுப்பு முதல்வராக திருச்சி பெரியாா் ஈவெரா கல்லூரியின் தமிழ்த் துறை இணைப் பேராசிரியா் கா.வாசுதேவனை நியமித்தும், பொறுப்பு முதல்வராக இருந்த சுதாவை அதே கல்லூரியில் தோ்வு கட்டுப்பாட்டு அலுவலராக தொடா்ந்து செயல்பட கல்லூரி கல்வி ஆணையா் இ.சுந்தரவல்லி திங்கள்கிழமை மாலை உத்தரவிட்டாா்.
இதையடுத்து கல்லூரியின் புதிய முதல்வராக கா.வாசுதேவன், கல்லூரி கல்வி இணை இயக்குநா் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் திங்கள்கிழமை இரவு பொறுப்பேற்றுக் கொண்டாா்.
மேலும், பல்வேறு கேள்விகளை எழுப்பி, அதற்கு உரிய விளக்கம் அளிக்குமாறு பொறுப்பு முதல்வராக இருந்த சுதாவுக்கு கல்லூரி கல்வி ஆணையா் அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...