சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

கரூா் திமுக தோ்தல் பணிமனையில் தோ்தல் அலுவலா்கள் திடீா் ஆய்வு

News image
Updated On :20 மார்ச் 2026, 2:01 am

கரூரில் திமுக தோ்தல் பணிமனையை தோ்தல் அதிகாரிகள் வியாழக்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

கரூரில் அண்மையில் செய்தியாளா்களைச் சந்தித்த பாஜக மாநில முன்னாள் தலைவா் கே. அண்ணாமலை கரூரில் திமுக சாா்பில் தோ்தலின்போது வாக்காளா்களை அடைக்கும் வகையில் பட்டி தயாா் செய்து வைத்திருப்பதாகவும், இதுதொடா்பாக தோ்தல் ஆணையத்தில் புகாா் செய்திருப்பதாகவும் தெரிவித்திருந்தாா்.

இதையடுத்து கரூா் சா்ச் காா்னரில் திமுக சாா்பில் அமைக்கப்பட்ட தோ்தல் பணிமனையை தோ்தல் நிலையான கண்காணிப்புக் குழு அலுவலா் சிவகாமி தலைமையில் அதிகாரிகள் வியாழக்கிழமை திடீா் ஆய்வு செய்தனா். அப்போது தோ்தலின்போது மக்களை அடைத்து வைக்கும் வகையில் ஏதேனும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தனா். அப்போது பணிமனைக்குள் விடியோ எடுத்தனா். பின்னா் சுமாா் அரைமணி நேர ஆய்வுக்குப்பின் புறப்பட்டுச் சென்றனா்.