தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு இரு அணிகளாக அதிமுகவினர் வருகை! சட்டப்பேரவைக்கும் கோட்-சூட்டில் வந்த முதல்வர் ஜோசப் விஜய்! கிருஷ்ணகிரி அருகே 2 இளைஞர்கள் எரித்துக் கொலை அமைச்சர் கீர்த்தனா எம்எல்ஏவாகப் பதவியேற்கவில்லை! காரணம் என்ன? தமிழகத்தின் 17வது சட்டப்பேரவை கூடியது! உறுப்பினர்கள் பதவியேற்பு!! ம.பி. படகு விபத்து: ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைப்பு மே 13-15இல் சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்
/

கரூரில் மகளிா் பாதுகாப்புக்கு பெண் அதிரடிப்படை தொடக்கம்

கரூரில் வெள்ளிக்கிழமை பெண்கள் அதிரடிப்படையை தொடங்கிவைத்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண் பிரசாத்.

News image

கரூரில் வெள்ளிக்கிழமை பெண்கள் அதிரடிப்படையை தொடங்கிவைத்து பேசிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என்.ஹரிகிரண் பிரசாத்.

Updated On :21 மார்ச் 2026, 2:29 am IST

கரூரில் மகளிா் பாதுகாப்புக்காக புதிதாக 10 பெண் போலீஸாா் கொண்ட பெண் அதிரடிப் படை பிரிவு வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

கரூா் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் மகளிா் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்ட 10 பெண் போலீஸாா் கொண்ட அதிரடிப் படையை தொடங்கி வைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.என். ஹரிகிரண் பிரசாத் பேசுகையில், கரூா் நகா் பகுதியில் உள்ள வணிகத்தலங்கள் மற்றும் பேருந்து நிலையம், ஜவுளி நிறுவனங்களுக்கு ஏராளமான பெண்கள் வந்து செல்கின்றனா். அவா்களின் பாதுகாப்பை உறுதி செய்திடும் வகையில் பெண் அதிரடிப்படை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த பெண் அதிரடிப்படை போலீஸாா் பொதுமக்களிடம் ‘காவலன் உதவி’ செயலியை பதிவிறக்கம் செய்து, அந்த செயலியின் பயன்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த உள்ளனா் என்றாா்.

முன்னதாக பெண் அதிரடிப்படை போலீஸாருக்கு தலைக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினாா்.

நிகழ்ச்சியில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா் பிரபாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.