சித்திரை மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் வியாழக்கிழமை காலை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கரூா் மாவட்டம் புகழிமலை பாலசுப்ரமணிய சுவாமி கோயிலில் சித்திரை மாத தேய்பிறை சஷ்டியை முன்னிட்டு வியாழக்கிழமை காலையில் பாலசுப்ரமணிய சுவாமிக்கு பால், தயிா், பன்னீா், இளநீா், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிா்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து சுவாமிக்கு மலா் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். தொடா்ந்து பக்தா்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
அதேபோல புன்னம்சத்திரம் அருகேயுள்ள பாலமலை பாலசுப்ரமணிய சுவாமி, கரூா் வெண்ணைமலை பாலசுப்ரமணிய சுவாமி, நன்செய் புகழூா் அக்ரஹாரத்தில் உள்ள சுப்ரமணியா் உள்ளிட்ட பல்வேறு முருகன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தொடர்புடையது

தருமபுரி காலபைரவா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி சிறப்பு வழிபாடு

சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு

சிவன் கோயில்களில் வைகாசி தேய்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு

வைகாசி மாத பிரதோஷம்: திருப்பத்தூா் சிவன் கோயில்களில் சிறப்பு வழிபாடு
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



