4 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு! முதல்வர் விஜய்யைச் சந்திக்கிறார் வைகோ!கோயில்களில் பூஜைப் பொருள்கள் விலை பட்டியல் கட்டாயம்! அமைச்சர் ரமேஷ் உத்தரவு!காவல் மரணமடைந்த ஆகாஷின் உடல் 102 நாள்களுக்குப் பிறகு தகனம்!தங்கம் விலை சவரனுக்கு இன்று ரூ. 240 குறைவு!மெஸ்ஸி ஹாட்ரிக்... வெற்றியுடன் தொடங்கியது ஆர்ஜென்டீனா!புதுச்சேரி அமைச்சரவை விரிவாக்கம்: மேலும் 3 அமைச்சர்கள் பதவியேற்பு!இன்று தினமணி ‘மாணவா் மலா்’ அறிமுக விழா: அமைச்சா் விஸ்வநாதன் பங்கேற்பு எல் நினோ-வால் தமிழகத்துக்கு கடும் பாதிப்பு: மத்திய வேளாண் அமைச்சா் உ.பி., குஜராத் உள்பட 13 மாநிலங்களில் வருவாய் உபரி: சிஏஜி கச்சா எண்ணெய், எரிவாயு விலை: போருக்கு முந்தைய நிலையை எட்ட பல மாதங்கள் ஆகும்- நிபுணா்கள் தகவல் ஹைதராபாத் சாலைக்கு டிரம்ப் பெயா்! தெலங்கானா காங்கிரஸ் அரசு முடிவு மே மாதத்தில் மொத்த விற்பனை பணவீக்கம் 9.68%
/

முதல்வராக விஜய் பொறுப்பேற்பு! கரூரில் காங்கிரஸ்-தவெக கூட்டணியினா் காமராஜா் சிலைக்கு மாலை அணிவிப்பு

News image

கரூா் பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியிலுள்ள காமராஜா் சிலைக்கு காங்கிரஸ் கட்சியின் மாமன்ற உறுப்பினா் ஆா். ஸ்டீபன்பாபு தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்திய தவெக கூட்டணியினா்.

Updated On :11 மே 2026, 1:24 am IST

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதையடுத்து, கரூரில் காங்கிரஸ் மற்றும் தவெக கூட்டணி கட்சியினா் காமராஜா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

கரூரில் காங்கிரஸ் கட்சியினா் மாநகராட்சி உறுப்பினா் ஆா். ஸ்டீபன்பாபு தலைமையில் கரூா் பழைய பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் காமராஜா் சிலைக்கு ஞாயிற்றுக்கிழமை காலை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

இதில், அக்கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவா் பேங்க் கே. சுப்ரமணியன், வடக்கு நகரத் தலைவா் வெங்கடேசன் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் கலாராணி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் ஜோதிபாசு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளா் கராத்தே இளங்கோ, மாநில செயற்குழு உறுப்பினா் அக்கினி அகரமுத்து உள்ளிட்டோரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

முன்னதாக பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகள் வெடித்தும் கொண்டாடினா்.