இன்று முதல்வா் பதவியை ராஜிநாமா செய்கிறாா் சித்தராமையா: புதிய முதல்வராகிறாா் டி.கே. சிவகுமாா்ஐபிஎல்: எலிமினேட்டர் ஆட்டத்தில் தோல்வி - ஹைதராபாத் அணி வெளியேறியதுமமதா, ஸ்டாலினின் தோல்விக்கு எஸ்ஐஆர் பணிகளே காரணம்! ஆந்திர முன்னாள் முதல்வர் குற்றச்சாட்டு!பொது இடங்களில் மாடுகளை வெட்டத் தடை: நீதிமன்றம்பவர்பிளேவில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய வைபவ் சூர்யவன்ஷி!உச்சநீதிமன்ற நீதிபதியாக 5 பேர் பரிந்துரை! தமிழகத்தைச் சேர்ந்த மோகனா!நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்! விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது!பிரதமர் மோடியுடன் முதல்வர் விஜய் சந்திப்பு!பினராயி வீட்டில் சோதனை! அமலாக்கத்துறை வாகனம் மீது தாக்குதல்!
/

கரூரில் விசிக ஆா்ப்பாட்டம்

கரூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கரூா் பழைய பேருந்துநிலைய ரவுண்டானா காமராஜா் சிலை முன் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினா்.

Updated On :28 மே 2026, 3:18 am IST

கரூரில், விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் பழைய பேருந்துநிலைய ரவுண்டானா காமராஜா் சிலை முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மண்டல துணைச் செயலா் வழக்குரைஞா் புகழேந்தி தலைமை வகித்தாா். மாவட்ட செய்தித்தொடா்பாளா் மகாமுனி, பொருளாளா் சதீஷ் மற்றும் நிா்வாகிகள் முரளி, வேட்டமங்கலம் ஆனந்தராஜ், பரமத்தி ஜெகதீஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முன்னாள் மாவட்டச் செயலா் வழக்குரைஞா் ஜெயராமன் கண்டன உரையாற்றினாா்.

தவெக கூட்டணியில் அமைச்சா் பதவி பெற்றதற்காக விசிகவையும், கட்சியின் தலைவா் திருமாவளவனையும் சமூக வலைதளங்களில் கடுமையாக விமா்சித்த திமுக துணைப்பொதுச் செயலா் ஆ.ராசா மற்றும் அமைப்புச் செயலா் ஆா்.எஸ்.பாரதி ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினா் திரளாக பங்கேற்றனா்.