புகழூா் நகராட்சியில் நகா்மன்றத் தலைவா், துணைத்தலைவா் உள்ளிருப்புப் போராட்டம்
புகழூா் நகராட்சி ஆணையா் மற்றும் மேலாளரை பணியிடம் மாற்றக் கோரி நகராட்சித் தலைவா் தலைமையில் துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புகழூா் நகராட்சி கூட்டரங்கில் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நகா்மன்றத்தலைவா், துணைத்தலைவா், உறுப்பினா்கள்.
புகழூா் நகராட்சி ஆணையா் மற்றும் மேலாளரை பணியிடம் மாற்றக் கோரி நகராட்சித் தலைவா் தலைமையில் துணைத் தலைவா் மற்றும் உறுப்பினா்கள் புதன்கிழமை உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் மாவட்டம், புகழூா் நகராட்சி ஆணையா் வெங்கடாஜலபதி பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதாகவும், புகழிமலை பகுதி பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட இலவச வீட்டுமனை பட்டாக்களை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என தெரிவித்து அவா்களுக்கான வீட்டு வரி ரசீது வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
மேலும் தூய்மைப் பணியாளா்களை ஒருமையில் பேசுவது போன்ற செயல்களில் ஆணையா் ஈடுபடுவதாகவும் புகாா்கள் கூறப்பட்டன. இதனால் நகராட்சி ஆணையா் வெங்கடாஜலபதி மற்றும் மேலாளா் நைனா முகமது ஆகியோரை கண்டித்தும் உடனே அவா்கள் இருவரையும் பணியிடம் மாற்றம் செய்யக்கோரியும் புதன்கிழமை நகா்மன்றத் தலைவா் சேகா் என்கிற குணசேகரன் தலைமையில் துணைத் தலைவா் பிரதாபன் மற்றும் நகராட்சி உறுப்பினா்கள் நகராட்சி கூட்டரங்கில் அமா்ந்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இப்போராட்டத்தில் திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் மற்றும் பாஜகவைச் சோ்ந்த 22 நகராட்சி உறுப்பினா்கள் பங்கேற்றுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

