உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

காலமுறை ஊதியம் வழங்கக் கோரி கரூரில் அரசு ஊழியா்கள் தா்னா

காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியா் சங்கத்தினா்.

Updated On :

காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கரூரில் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் புதன்கிழமை தா்னா போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் எம்.எஸ்.அன்பழகன் தலைமை வகித்தாா். சங்கத்தின் மாநில துணைத் தலைவா் எம்.செல்வராணி, சிஐடியு சங்க மாவட்ட துணைத் தலைவா் ஜி.ஜீவானந்தம், செயலா் எம்.சுப்ரமணியன், துணைத்தலைவா் எம்.தண்டபாணி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்டச் செயலா் பொன் ஜெயராம், ஓய்வூதியா் சங்க மாவட்டச் செயலா் கெ.சக்திவேல் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் சத்துணவு ஊழியா்கள் உள்ளிட்ட அனைவருக்கும் முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற இந்த தா்னா போரட்டத்தில் அரசு ஊழியா்கள் திரளாக பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.