சென்னையில் பதுக்கி வைத்திருந்த 40 சிலிண்டா்கள் பறிமுதல்!புனேவில் 4 வயது குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்து கொன்ற முதியவர்!மணிப்பூரில் 23 சட்டவிரோத பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படையினர்!தேர்தல் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் பேசுபொருளாகும் ஜோதிமணி ட்வீட்!கட்டாய வெற்றிக்கான தேவையுடன் இன்று மோதும் சென்னை - மும்பைஈரான் புதிய சமரசத் திட்டம்: திருப்தியில்லை என டிரம்ப் நிராகரிப்புமேற்கு வங்கத்தின் 15 வாக்குச்சாவடிகளில் இன்று மறு வாக்குப் பதிவு
/

தெளிப்பான் முறையில் நீர்ப்பாய்ச்சி வளங்களைச் சேமிக்கும் விவசாயி

தெளிப்பான் முறையில் சின்ன வெங்காயப் பயிருக்கு நீர்ப்பாய்ச்சுவதன் மூலம் காலநேரம்,மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட வளங்களைச் சேமித்து

News image
Updated On :9 டிசம்பர் 2016, 9:52 am

தெளிப்பான் முறையில் சின்ன வெங்காயப் பயிருக்கு நீர்ப்பாய்ச்சுவதன் மூலம் காலநேரம்,மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட வளங்களைச் சேமித்து வருகிறார் இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டுள்ள பட்டதாரி இளைஞர் ந. திருநாவுக்கரசு.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட இரூர் கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு முதுநிலை பட்டப் படிப்பு (எம்.சி.ஏ) முடித்து,அவருக்குச் சொந்தமான நிலத்தில் சின்ன வெங்காயப் பயிருக்கு நீர்த்தெளிப்பான் முறையில் நீர்ப்பாய்ச்சி வரும் அவர் மேலும் கூறியது:
பெரம்பலூர் மாவட்டத்தில் அண்மைக்காலமாக போதிய மழை இல்லாததால் சின்ன வெங்காயம் பயிரிடப்பட்டுள்ள பெரும்பாலான விவசாய நிலங்களில் பயிர்கள் காய்ந்து கருகி வருகின்றன. இதைத் தவிர்க்கும் வகையில், எனது ஒரு ஏக்கர் பரப்பளவில் முன்னோட்டமாக ரூ. 40 ஆயிரம் மதிப்பில் நீர்த்தெளிப்பான் கருவிகள் மூலம் வெங்காயப் பயிர்களுக்கு நீர்ப்பாய்ச்சி வருகிறேன்.
சொட்டுநீர் அல்லது வரப்புகள் மூலம் ஒரு ஏக்கர் நிலத்துக்கு நீர் பாய்ச்ச வேண்டுமெனில் சுமார் 6 மணி நேரமாகும். ஆனால், நீர்த்தெளிப்பான் முறையில் 3 மணிநேரமே போதுமானது.  ஒரு ஏக்கருக்கு 100 நீர்தெளிப்பான் கருவிகள் பொருத்தியுள்ளதால், அனைத்து இடங்களிலும் நீர்ப்பாய்ச்ச முடிகிறது.
இதன் மூலம் காலநேரம்,மின்சாரம் ஆகியவை சேமிக்கப்படுவதோடு,தண்ணீர் வீணாவது தடுக்கப்படுகிறது. சொட்டுநீர்ப் பாசன முறையைப் போல், நீர்த்தெளிப்பான் முறைக்கும் வேளாண் துறையினர் மான்யம் வழங்கினால் விவசாயிகள் பெரிதும் பயனடைவர் என்றார் அவர்.   
சின்ன வெங்காய உற்பத்தியில் பெரம்பலூர் மாவட்டம் 23% சாகுபடி செய்து மாநிலத்திலேயே முதலிடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.