கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!சென்னை போரூர் அருகே இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை!பிரிட்டனில் 16 வயதுக்குட்பட்டோர் சமூக ஊடகங்கள் பயன்படுத்த தடை!முக்கிய நிறுவன ஸ்மார்ட்போன்களின் விலை ஏற்றம்! எவ்வளவு உயர்ந்தது?தில்லியை தாக்கிய புழுதிப் புயல்! சிவப்பு எச்சரிக்கை விடுப்பு!அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழை!
/

காவிரி விவகாரம்: திமுகவினர் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரியலூர் தேரடி பகுதியில் திமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Updated On :5 ஏப்ரல் 2018, 9:26 am IST

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி அரியலூர் தேரடி பகுதியில் திமுகவினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரி மேலாண்மை வாரியம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியது. ஆனால், உச்ச நீதிமன்றம் அளித்த 6 வார கெடு முடிந்தும் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்கவில்லை. 
இதைக் கண்டித்தும், உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தியும், தமிழகம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அரியலூர் தேரடிப் பகுதியில் திமுக மாவட்டச் செயலாளர் எஸ்.எஸ்.சிவசங்கரன் தலைமையில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து அவர்கள் மத்திய அரசுக்கு  எதிராக முழக்கமிட்டு, பிரதமர் மோடி உருவப்பொம்மையை எரித்தனர். முன்னதாக அக்கட்சி நிர்வாகிகள், வியாழக்கிழமை ( ஏப். 5) நடைபெறுகிற முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தரக்கோரி அனைத்து வணிகக் கடை உரிமையாளர்களடம் துண்டுப் பிரசுரம் விநியோகித்தனர். 
மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்: காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி, அரியலூர் பேருந்து நிலையம் முன்பு வழக்குரைஞர் மாரிமுத்து தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், அரியலூர் மாவட்டத்தைச் இளைஞர் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.