பெரம்பலூர் அருகே ஞாயிற்றுக்கிழமை கார் மோதி 2 பேர் உயிரிழந்தனர்.
சென்னை, பட்டினப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீதர், கொடைக்கானலில் படித்துக் கொண்டிருக்கும் தனது மகனை பார்க்க சென்னையிலிருந்து கொடைக்கானலுக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அந்த கார், ஞாயிற்றுக்கிழமை காலை திருச்சி- சென்னை நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டத்துக்குள்பட்ட விஜயகோபாலபுரம் பகுதியில் வந்தபோது, காரின் முன்பக்க டயர் வெடித்து நிலைதடுமாறி சாலையில் தறிகெட்டு ஓடியது. அப்போது, அந்த பகுதியில் சாலையைக் கடக்க மோட்டார் சைக்கிளில் நின்றுகொண்டிருந்த பெரம்பலூர் அருகேயுள்ள கோனேரிபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மீனா (22), மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த மருதுபாண்டி (25) ஆகியோர் கார் மோதி உயிரிழந்தனர். தகவலறிந்த பாடாலூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு சென்று உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். உயிரிழந்த இருவரும் அப்பகுதியில் இயங்கி வரும் தனியார் பால் பண்ணையில் ஊழியர்கள். விபத்து குறித்து பாடாலூர் போலீஸார் வழக்குப் பதிந்து, காரை ஓட்டி வந்த ஸ்ரீதரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கதை, திரைக்கதை - திமுக IT WING! அமைச்சர் ராஜ்மோகன் | TVK
ராகுல் காந்தி இந்தியாவின் சாதனைகளைக் குறைத்து மதிப்பிடுகிறார்: நிர்மலா சீதாராமன்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

ரூ. 400 கோடி வசூலை நெருங்கிய பெத்தி!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


