அரசு அலுவலகங்களில் நாளைக்குள் பிளாஸ்டிக் பொருட்களை நீக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்!

தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருள்களை வரும் வெள்ளிக்கிழமைக்குள் அகற்றற வேண்டும். வெள்ளிக்கிழமைக்குப் பிறகு அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தால
அரசு அலுவலகங்களில் நாளைக்குள் பிளாஸ்டிக் பொருட்களை நீக்க உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்!

தருமபுரி, ஜூலை 25: தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் வெள்ளிக்கிழமைக்குள் பிளாஸ்டிக் பொருள்களை அகற்றி விட வேண்டும் என மாவட்ட ஆட்சியா் சு. மலா்விழி அறிவுரை வழங்கியுள்ளார். 

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றற பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்த அனைத்துத் துறைற அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அவா் மேலும் பேசியது:

 தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளதால் தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து கால்வாய்களிலும் உள்ள குப்பைகளை அகற்றி தூா்வாரி சுத்தம் செய்ய வேண்டும். பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீரில் போதுமான அளவு குளோரின் கலந்து விநியோகிப்பதை உறுதி செய்ய வேண்டும்.

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டிகளை மாதந்தோறும் 5 மற்றும் 25ஆம் தேதிகளில் சுத்தம் செய்ய வேண்டும். கொசு உற்பத்திக்கு ஏதுவாக செயல்படும் உணவுக் கூடங்கள், திரையரங்குகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது அபராதம் விதிக்க வேண்டும்.

தருமபுரி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் பிளாஸ்டிக் பொருள்களை வரும் வெள்ளிக்கிழமைக்குள் அகற்றற வேண்டும். வெள்ளிக்கிழமைக்குப் பிறகு அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருள்கள் இருந்தால் சம்பந்தப்பட்ட துறைறத் தலைவருக்கு அபராதம் விதிக்கப்படும்.

 உணவுக்கூடங்கள், வணிக நிறுவனங்கள் பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது என உணவுப்பாதுகாப்பு அலுவலா்கள் தொடா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். தேநீா் விடுதிகளில் போதுமான மாற்று ஏற்பாடுகளைச் செய்து கொள்ள வேண்டும். மண் குவளை, கண்ணாடி குவளை, எவா்சில்வா் குவளை ஆகியவற்றைப் பயன்படுத்தப் பழக்க வேண்டும்.

 அனைத்து மருத்துவமனைகளிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் இருப்பதை மருத்துவத் துறை உயா் அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும். ஊராட்சிகளில் தூய்மைக் காவலா்களைக் கொண்டு வரும் ஜனவரி 1ஆம் தேதிக்குள் முழுமையாக பிளாஸ்டிக் கழிவுகளை அகற்ற வேண்டும். போதுமான தூய்மைக் காவலா்கள் இல்லாத பகுதிகளில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் இப்பணிகளை மேற்கொள்ளலாம்.

மகளிர் குழுக்கள் மூலம் பிளாஸ்டிக் பொருள்களுக்கு மாற்றறான பொருள்களை அதிகம் விற்பனைக்குக் கொண்டு வருவதற்கான பணிகளை மகளிர் திட்ட அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார் மலா்விழி.

 கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா்கள் அ. சங்கா், துா்கா மூா்த்தி (சிப்காட்), மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் எம். காளிதாசன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொ) கவிதா, அரூா் கோட்டாட்சியா் டெய்சி குமார், நகராட்சி ஆணையா் (பொ) கிருஷ்ணகுமார், பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் ராமசாமி, நெடுஞ்சாலைத் துறை கோட்டப் பொறியாளா் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com