இந்திய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில், பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூரில் ரூ. 13.03 கோடி மதிப்பில் தரைவழி மேம்பாலம் கட்டும் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
விழாவில், மேம்பாலப் பணிகளுக்காக அடிக்கல் நாட்டிய மத்திய கப்பல் போக்குவரத்து மற்றும் நிதித்துறை இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் மேலும் பேசியது:
உலகிலேயே மிக அதிகமாக 53 லட்சம் கி.மீ தூரம் கொண்ட சாலையை நாம் பெற்றிருக்கிறோம். இதில், சுமார் 1 லட்சம் கி.மீ சாலைகள் தேசிய நெடுஞ்சாலைகள். இதில் 80 சதவீத பயணிகள் போக்குவரத்தும், 65 சதவீத சரக்கு போக்குவரத்தும் நடைபெறுகிறது. ஆண்டுக்கு 5 லட்சம் விபத்துகள் நிகழ்கின்றன. இதில், 1.5 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். தமிழகம் அதிகம் விபத்து நிகழும் மாநிலங்களில் ஒன்று.
தமிழகத்தில் 78 இடங்களும், திருச்சி மண்டலத்தில் 11 இடங்களும் அதிக விபத்துகள் நிகழும் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில், உளுந்தூர்பேட்டை முதல் பாடாலூர் வரையில் 5 இடங்கள் அமைந்துள்ளன. அதில் ஒன்றான, சிறுவாச்சூரில் தற்போது ரூ. 13.03 கோடி மதிப்பில் தரைவழி மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் இப்பணிகள் நிறைவடையும். பா.ஜ.க ஆட்சிக் காலத்தில் தேசிய நெடுஞ்சாலை பரப்பளவை இரு மடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு அதன்படி, நாள் ஒன்றுக்கு 28 கி.மீ தூரம் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார்.
மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், பெரம்பலூர் தொகுதி எம்.பி ஆர்.பி. மருதராஜா, தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்ட இயக்குநர் மு. சங்கர சுப்பிரமணியன், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ. அழகிரிசாமி, பா.ஜ.க நிர்வாகிகள் எம். சிவசுப்ரமணியம், சி. சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
காவிரியில் தமிழகத்தின் பங்கைப் பெற நமக்கு உரிமை உண்டு
பெரம்பலூர் அருகேயுள்ள சிறுவாச்சூரில் ரூ. 13.03 கோடி மதிப்பீட்டில் தரைவழி மேம்பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் திங்கள்கிழமை பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டி:
காவிரியில் 177.25 டி.எம்.சி தண்ணீர் தமிழகத்துக்கு வந்தாக வேண்டும். அதுவும் தடையின்றி வந்தாக வேண்டும். இதை, யார் தடுத்தாலும் அதை மீறி அந்த நீரை பெறுவதற்கு நமக்கு உரிமை உண்டு. எதிர்க்கட்சிகளுக்கு இந்த ஆட்சியை விமர்சிக்க வேறு விஷயங்கள் இல்லாததால், காவிரி விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு விமர்சிக்கின்றனர். மேலும் அவர்கள் தமிழக விவசாயிகளையும் குழப்புகின்றனர். நீதிமன்றம் மூலம் வரும் 16 ஆம் தேதி நமக்கு நல்ல முடிவு கிடைக்கும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்

தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தில் ஆடைக் கட்டுப்பாடு: மாணவா்கள் போராட்டம்

குஷ்பு சென்ற ஹெலிகாப்டரில் பறக்கும் படை சோதனை!

ஆதிக்கவாதிகளையும் அடிமைகளையும் எதிர்த்து போராடி வெல்வோம்! முதல்வர் ஸ்டாலின் சூளுரை
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

