பெரம்பலூர் மாவட்டம், செட்டிக்குளத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குபேர யாக வேள்வியில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம், செட்டிக்குளத்தில் அமைந்துள்ள அருள்மிகு காமாட்சி உடனுறை ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயிலில், பிரசித்தி பெற்ற சித்திரலேகா சமேத குபேர பெருமானுக்கு தனி சந்நிதி உள்ளது. மேலும், 12 ராசிகளுக்கும் 12 தூண்களில், 12 குபேர பெருமான் இருப்பது இந்த ஆலயத்தின் தனிச் சிறப்பாகும்.
இங்கு, ஒவ்வொரு மாதமும் பூரட்டாதி நட்சத்திரத்தில் குபேர யாக வேள்வி நடைபெறும். அதன்படி, ஜப்பசி மாத குபேர பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கணபதி ஹோமம், புன்யா வாஹனம், லஷ்மி ஹோமம் ஆகிய பூஜைகள் செய்யப்பட்டு, 96 வகை மூலிகைப் பொருள்கள் யாக வேள்வியில் செலுத்தப்பட்டு மஹா பூர்னா ஹூதியும், தீபாரதனையும் நடைபெற்றது.
தொடர்ந்து, அருள்மிகு சித்திரலேகா சமேத குபேர பெருமானுக்கு அரிசி மாவு, பால், தயிர், மஞ்சள், சந்தனம், திரவிய பொடி, சொர்ணாபிஷேகம் நடத்தப்பட்டு, ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட கலசத் தீர்த்தங்களால் குபேர பெருமானுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
மேலும் பல்வேறு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகளுக்கு பிறகு அலங்கார தீபாரதனையும் நடைபெற்றது. குபேர யாக வேள்வியில் கலந்துகொள்வதன் மூலம் கடன் பிரச்னைகள் தீரும், செல்வ வளம் பெருகும் என்பதால் திருச்சி, சேலம், பெரம்பலூர் உள்பட சுற்றுப்புற பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு குபேரப் பெருமானை தரிசனம் செய்தனர். பூஜை ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

Vijay-க்கு வாய்ப்பில்லை! திமுக கூட்டணிதான் வெற்றிபெறும்! - திருமா | VCK

பாபர் அசாமுக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு வழங்கப்படுமா?
மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் மறுவாக்குப்பதிவு நிறைவு!
அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

