அரசுப் பேருந்தில் பயணம் செய்ய இலவச பயண பேருந்து அட்டை வழங்க விருது பெற்ற நல்லாசிரியர்கள் சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.
பெரம்பலூரில் அகில இந்திய விருது பெற்ற ஆசிரியர் சங்கத்தின் மாவட்ட செயற்குழு கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டத் தலைவர் ஜெயராமன் தலைமை வகித்தார். பொருளாளர் திருநாவுக்கரசு முன்னிலை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் சையத்பாஷாகான், துணைத் தலைவர் சிவராமன், செயற்குழு உறுப்பினர்கள் ரெங்கசாமி, புலவர் கோவிந்தன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
கடந்தாண்டு தமிழகத்தைச் சேர்ந்த 22 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்பட்டது. ஆனால், நிகழாண்டு ஒரு ஆசிரியருக்கு மட்டுமே விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, கடந்த ஆண்டைப்போல, தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது வழங்க வேண்டும். விருது பெற்ற நல்லாசிரியர்கள் அரசு பேருந்தில் இலவசமாக பயணம் செய்யும் வகையில் பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
திமுக அரசின் சட்டம் ஒழுங்கு தோல்விக்கு முழு சாட்சி: சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு அண்ணாமலை கண்டனம்

சென்னையை சுற்றியிருக்கும் முக்கிய கோயில்கள்
குழந்தைகள் உணவில் எலி விஷம்! விற்ற பொருள்களைத் திரும்பப் பெறும் தனியார் நிறுவனம்!
லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

