எறையூர் சர்க்கரை ஆலையில் அரவைபணி தொடக்கம்

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 2018-2019 ஆம் ஆண்டுக்கான அரவைப்பணி சனிக்கிழமை தொடங்கியது.
Updated on
1 min read

பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் 2018-2019 ஆம் ஆண்டுக்கான அரவைப்பணி சனிக்கிழமை தொடங்கியது.
வேப்பந்தட்டை வட்டம், எறையூரில் பொதுத்துறைக்குச் சொந்தமான  சர்க்கரை ஆலையில் நடைபெற்ற நிகழ்வில் அரவைப் பணியை  தலைமை நிர்வாகி  ஜெயினுலாப்தீன் தொடக்கி வைத்தார்.
நடப்பு ஆண்டில் அரவைக்கு பெரம்பலூர்மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 2 லட்சம் டன் கரும்பை அரைப்பது எனவும், சுமார் 1 லட்சம் டன் வெளியில் இருந்து பெறவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  இணைமின் திட்டத்துக்கான பாய்லரில் சோதனை ஓட்டம் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும், ஜனவரி முதல் வாரத்தில் மின் உற்பத்தி தொடங்கும் எனவும் சர்க்கரை ஆலை அதிகாரிகள் தெரிவித்தனர். 
இந்நிகழ்வில், தமிழக விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஆர். ராஜாசிதம்பரம், செந்துறை திமுக ஒன்றியச் செயலர் மு.  ஞானமூர்த்தி, விவசாயிகள் சங்க நிர்வாகிகள் பு. லேந்திரன், ந. ப. அன்பழகன், பெருமாள், மாணிக்கம், ராஜீவ் கரும்பு உற்பத்தியாளர் சங்கத் தலைவர் வரதராஜன் , டிராக்டர் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் தேவேந்திரன்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com