பூச்சித்தாக்குதல் : மக்காச்சோளத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

பூச்சித் தாக்குதலுக்குள்ளான மக்கச்சோளம் பயிருக்கு இழப்பீடு வழங்கக்கோரி அய்யலூர்குடிகாடு மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.

பூச்சித் தாக்குதலுக்குள்ளான மக்கச்சோளம் பயிருக்கு இழப்பீடு வழங்கக்கோரி அய்யலூர்குடிகாடு மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனர்.
 பெரம்பலூர் மாவட்ட  ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் ஆட்சியரிடம் அவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பது:
அய்யலூர்குடிகாடு கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிட்டுள்ளோம். இப்பயிரில் பூச்சி தாக்குதலால் விளைச்சல் மிகவும் பாதிப்படைந்துள்ளது. 
எங்களுக்கு பிரதமரின் பயிர்காப்பீடு திட்டத்தின் கீழ் உரிய இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பயிர் காப்பீடு நிறுவனத்தின் கள அலுவலர் மற்றும் வேளாண் அலுவலர்கள் குழுவை எங்கள் கிராமத்துக்கு அனுப்பி மதிப்பீடு செய்து நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
தமிழக அரசின் அங்கீகாரம் இல்லாத தனியார் செவிலியர் உதவியாளர் பயிற்சி பள்ளியில் படித்தவர்களுக்கு கருணை அடிப்படையில் கிராம சுகாதார செவிலியர் பணி வழங்கக்கோரி, மாவட்ட ஆட்சியரிடம் செவிலியர் உதவியாளர் பயிற்சி முடித்தவர்கள் கோரிக்கை மனு அளித்தனர். 
தமிழ்நாடு செவிலியர் உதவியாளர்கள் நலச்சங்கத்தின் மாநில செயலர் சுரேஷ் ராஜா தலைமையில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.         

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com