பெரம்பலூரில் கால்வாய் அமைத்து நீர்வளம் காக்கப்படும்
By DIN | Published On : 01st April 2019 09:13 AM | Last Updated : 01st April 2019 09:13 AM | அ+அ அ- |

பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்றால், முசிறியில் இருந்து பெரம்பலூர், அரியலூர் வழியாக கால்வாய் அமைக்கப்படும் என்றார் அமமுக அமைப்புச் செயலர் மனோகரன்.
பெரம்பலூர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. பெரம்பலூர் புறநகர்ப் பகுதியான துறைமங்கலத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, மாவட்டச் செயலர் எஸ். கார்த்திகேயன் தலைமை வகித்தார். கூட்டத்தில், சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற அக் கட்சியின் அமைப்புச் செயலர் மனோகரன் பேசியது:
இத்தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் வெற்றிபெற்றால், முசிறியில் இருந்து துறையூர்
பெரம்பலூர், அரியலூர் வழியாக கால்வாய் அமைக்கப்படும் என்றார் அவர். தொடர்ந்து, அமமுக வேட்பாளர் எம். ராஜசேகரன், கட்சித் தொண்டர்களின் தேர்தல் பணி, வாக்கு சேகரிப்பு, வாக்குச்சாவடி முகவர்கள் செயல்படும் விதம் குறித்து விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில், மாவட்ட அவைத் த
லைவர் என். கிருஷ்ணகுமார், தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட செயலர் கலைவாணன், ஒன்றிய செயலர்கள் கே. நாகராஜன், செ. வீரமுத்து, எம். செந்தில்குமார், ஜெயக்குமார், வீரமணி உள்பட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் பங்கேற்றனர்.