பொதுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க  தவறியோருக்கு ஆன்லைனில் வாய்ப்பு

மேல்நிலை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
Updated on
1 min read

மேல்நிலை பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கத் தவறிய தனித்தேர்வர்கள், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு விடுத்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
முதன்முறையாக பிளஸ் 1 தேர்வெழுதுவோர் உரிய தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணத்தை 
சேவை மையங்களில் பணமாகச் செலுத்த வேண்டும். 
10 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி பெற்றதற்கான அசல் மதிப்பெண் சான்றிதழ் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழின் நகல் மற்றும் இடம் பெயர்வு சான்றிதழ் அசல் (வெளி மாநிலத் தேர்வர்கள் மட்டும்) ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.  
ஏற்கெனவே பிளஸ் 2 தேர்வெழுதி தோல்வியுற்றோர் உரிய தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணத்தை ஏற்கெனவே பிளஸ் 2 தேர்வு எழுதியதற்கான மதிப்பெண் பட்டியல் நகலை எடுத்துச் செல்ல வேண்டும். 
தேர்வெழுதத் தேவையான வருகைப்பதிவு உள்ளது என்பது தொடர்பாக பள்ளித் தலைமை ஆசிரியரிடம் பெற்ற தகுதிச் சான்றிதழ் (பள்ளி மாணவராகத் தேர்வெழுத பதிவு செய்து தேர்வெழுதாதவர்களுக்கு மட்டும்) மற்றும் செய்முறை மதிப்பெண்களுக்கான ஆவணம் (செய்முறை அடங்கிய பாடங்களில் தேர்வெழுதுவோர் மட்டும்). 
புதிய நடைமுறையின்படி (600 மதிப்பெண்கள்) பிளஸ் 2 தேர்வெழுதுவோர் உரிய தேர்வுக் கட்டணம் மற்றும் ஆன்லைன் பதிவுக் கட்டணத்தை சேவை மையங்களில் பணமாகச் செலுத்தி, இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்ட முதலாமாண்டு தேர்வெழுதி பெற்ற மதிப்பெண் பட்டியல் அல்லது தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். 
தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் ஏப். 15, 16 ஆகிய தேதிகளில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இத்தேர்வுகள் சார்ந்த விரிவான தகவல்களை  w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n எனும் இணையதளத்தில் காணலாம்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com