சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
By DIN | Published On : 06th February 2019 09:31 AM | Last Updated : 06th February 2019 09:31 AM | அ+அ அ- |

பெரம்பலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் 30-வது சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.
பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் நடைபெற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில், வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர்கள் செல்வராஜ், பெரியசாமி, போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் நாவுக்கரசன் ஆகியோர், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.
மேலும், அவ்வழியே தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள்களை ஓட்டிச் சென்ற நபர்களிடம், தலைக்கவசம் அணிவதன் பயன்களை விளக்கி, சாலை விதிகளை கடைபிடித்து விபத்துகளை தவிர்க்க ஒத்துழைக்க வேண்டுமென வலியுறுத்தினர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...