பெரம்பலூரில் நாளை உலகத் திறனாய்வு: திட்ட தடகளப் போட்டிகள்
By DIN | Published On : 12th February 2019 08:44 AM | Last Updated : 12th February 2019 08:44 AM | அ+அ அ- |

பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உலகத் திறனாய்வுத் திட்ட தடகளப் போட்டிகள் புதன்கிழமை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: 2018- 2019 ஆம் கல்வி ஆண்டுக்கான உலகத் திறனாய்வுத் திட்டத்தின் கீழ் 6, 7, 8 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு உடல்திறன் போட்டிகள் நடத்தப்பட்டதில், 8, 9, 10 மதிப்பெண்கள் பெற்று தேர்வு பெற்றவர்களுக்கு கல்வி மாவட்ட அளவில் தடகளப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் புதன்கிழமை காலை 9 மணி முதல் தடகளப் போட்டி நடைபெறுகிறது.
இதில் பங்கேற்போர்காலை 8 மணிக்கு வர வேண்டும். வகுப்பு வாரியாக தனித்தனியே போட்டிகள் நடத்தப்படும். தடகளம் விளையாட்டில் மூன்று பிரிவுகளில் பங்கேற்கலாம். முதல் இரண்டு இடத்தில் வெற்றி பெறுவோர் மண்டல அளவில் நடைபெறும் போட்டிகளுக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.