சுடச்சுட

  

  மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக பெரம்பலூர்,எளம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (பிப்.13) மின் விநியோகம் இருக்காது.
  இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக பெரம்பலூர் உதவிச் செயற்பொறியாளர் கி.மாணிக்கம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பெரம்பலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் புதன்கிழமை மேற்கொள்ளப்பட உள்ளன.
  இதனால் இங்கிருந்து மின் விநியோகம் பெறும்  பழைய, புறநகர் பேருந்து நிலையங்கள், சங்குப்பேட்டை, மதனகோபாலபுரம், துறைமங்கலம், மின்நகர், நான்குச் சாலை சந்திப்பு, பாலக்கரை, எளம்பலூர் சாலை, ஆத்தூர் சாலை, வடக்குமாதவி சாலை, துறையூர் சாலை, அரணாரை, ஆலம்பாடி சாலை, அண்ணா நகர், கே.கே. நகர், அபிராமபுரம், வெங்கடேசபுரம், பாலம்பாடி, பீல்வாடி, அசூர், சிறுகுடல், சித்தளி, அருமடல், செங்குணம், கீழப்புலியூர், கே.புதூர், எஸ்.குடிகாடு, இந்திரா நகர், காவலர் குடியிருப்பு, எளம்பலூர், சமத்துவபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 மணி முதல் பராமரிப்புப் பணி முடியும் வரை மின்சாரம் இருக்காது. 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai