மண் பானை சுடும் எரியூட்டி அமைக்க விண்ணப்பிக்கலாம்
By DIN | Published On : 12th February 2019 09:33 AM | Last Updated : 12th February 2019 09:33 AM | அ+அ அ- |

பெரம்பலூர் மாவட்டத்தில் மண்பானை சுடும் எரியூட்டி அமைக்க ஆர்வமுள்ள நிறுவனங்கள் பிப். 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வே.சாந்தா திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
வேப்பந்தட்டை வட்டம், தழுதாழை ஊராட்சியில், மரச்சிற்பம் செய்யும் திட்டத்துக்கு கணினி வரைபட உதவியுடன் கூடிய மரம் கடையும் இயந்திரம் மற்றும் குரும்பலூர் பேரூராட்சியில் மண்பானை சுடும் எரியூட்டி அமைக்க ஆர்வமுள்ள நிறுவனங்கள் தங்களது விண்ணப்பங்களை பிப். 15 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு, பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரகத்தில் செயல்படும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க அலுவலகத்திலும், www.perambalur.nic.in எனும் இணையதளம் மூலமாகவும் அறியலாம்.