சுடச்சுட

  

  பெரம்பலூர் மாவட்ட ஓய்வூதியர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஜூன் 21 ஆம் தேதி நடைபெற உள்ளது எனத் தெரிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா. 
  இதுகுறித்து அவர் புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
  பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், அரசு கூடுதல் செயலரும், நிதித்துறை ஓய்வூதிய இயக்குநருமான ஜெ. கயிலைநாதன் தலைமையில், பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா முன்னிலையில், ஓய்வூதியர் குறைதீர்க் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 21) காலை 10.30 மணியளவில் நடைபெற உள்ளது.
  எனவே, பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓய்வூதியர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்த மனுக்களின் 2 பிரதிகளை ஜூன் 17 ஆம் தேதிக்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரிலோ அல்லது அஞ்சல் வழியாகவோ அளிக்கலாம்.  மேலும், 21 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பங்கேற்றுப் பயன் பெறலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai