பெரம்பலூரில் சிஐடியு ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 14th June 2019 09:08 AM | Last Updated : 14th June 2019 09:08 AM | அ+அ அ- |

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி சிலை எதிரே, சி.ஐ.டி.யு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் ஆர். சிற்றம்பலம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் ஆர். அழகர்சாமி, துணை செயலர்கள் எஸ். அகஸ்டின், ஆர். ராஜகுமாரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழிற்சங்கம் அமைக்கும் தொழிலாளர்கள் பலர் வேலை இழந்துள்ளனர். சிலர் மீது வழக்குப் பதிந்து பழிவாங்கப்படுகின்றனர். எனவே, தமிழக அரசு இப்பிரச்னையில் தலையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுத்து தொழிலாளர்களை பாதுகாக்க வேண்டும். பெரம்பலூர் நகராட்சியில் ஒப்பந்த முறையைக் கைவிட்டு, நகராட்சி நிர்வாகமே மாதம் 5 ஆம் தேதிக்குள் ஊதியம் வழங்க வேண்டும். பிடித்தம் செய்த பி.எப் தொகைக்கு ரசீது வழங்க வேண்டும். காப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
ஆர்ப்பாட்டத்தில், ஆட்டோ சங்க மாநிலக்குழு உறுப்பினர் சி. சண்முகம், மாவட்ட செயலர் எ. ரெங்கநாதன், கட்டுமானத் தொழிலாளர் சங்க நிர்வாகி எ. கணேசன், பொது தொழிலாளர் சங்க நிர்வாகி பி. முத்துசாமி, மின் ஊழியர் மத்திய அமைப்பு உறுப்பினர் எம். பன்னீர்செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.