உலக வன நாள் தினவிழா கொண்டாட்டம்
By DIN | Published On : 22nd March 2019 09:06 AM | Last Updated : 22nd March 2019 09:06 AM | அ+அ அ- |

பெரம்பலூர் மாவட்ட வனத்துறை சார்பில், உலக வன நாள் விழாவையொட்டி மரக்கன்று நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
கடந்த 1971 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐரோப்பிய விவசாய குழுமத்தின் 23 ஆவது பொதுக்கூட்டத்தில் உலக வன நாள் விழா கொண்டாட முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, ஐக்கிய நாடு உணவு மற்றும் விவசாய நிறுவனங்கள் ஒவ்வோர் ஆண்டும் மார்ச் 21 ஆம் தேதிதியை உலக வன நாள் தினமாகக் கடைப்பிடித்து வருகின்றன.
அதன்படி, பெரம்பலூர் மாவட்ட வனத்துறை சார்பில் மாவட்ட தொழில்மைய அலுவலகம் எதிரே நடைபெற்ற மரக்கன்று நடும் விழாவுக்கு, மாவட்ட வன அலுவலர் அசோகன் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் வே. சாந்தா, மரக்கன்றுகள் நடும் பணியை தொடக்கி வைத்தார். மரக்கன்று நடுதலை தொடங்கிவைத்தார். தொடர்ந்து, அங்கு பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சியில், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் செந்தில்குமார், பெரம்பலூர் வனச்சரகர் சசிக்குமார், வேப்பந்தட்டை வனச்சரகர் குமார், வனவர்கள் பாண்டியன், குமார், சுப்ரமணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...